மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் விஜய்யை நேரில் சந்தித்த புகைப்படமும் வெளியானது. ஆனால் விக்ரம் படம் முடிவடைய உள்ளதால் விஜய்யை நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியானது.

மாஸ்டர் படத்தில் பல புதிய நடிகர்கள் நடித்திருந்தனர். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் நடித்த எழில் என்பவர் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் தற்போது யாரோ ஒருவர் எழில் நடித்த காட்சியை பார்த்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் புகைப்படத்தை பார்க்கும் போது எழில்தான் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தற்போது எழில் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் இனிமேல் அவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

கவர்ச்சி காட்ட மட்டும் நான் சினிமாவிற்கு வரவில்லை.. இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதிக ...
AllEscort