மாறனை காப்பாற்றிய அந்த 30 நிமிடம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படம் நேற்று ஹாட்ஸ்டாரில் வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோகனன், ராம்கி, ஸ்மிருதி வெங்கட், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை பார்த்த பலரும் பல கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

ஏனென்றால் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கார்த்திக் நரேன் அதன்பிறகு இயக்கிய எந்த திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. இந்நிலையில் அவர் தனுஷ் உடன் கூட்டணி வைத்து படத்தை இயக்கப்போகிறார் என்றதுமே இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. மாறன் படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததாலும் எதிர்பார்த்த அளவுக்கு காமெடி, காதல் காட்சிகள் போன்றவை இடம் பெறாததால் ரசிகர்களுக்கு இப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை.

தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து சொதப்பி விட்டார் என்று கார்த்திக் நரேனை பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மாறன் திரைப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம்தான் அனைவருக்கும் சஸ்பென்ஸாக இருந்துள்ளது.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் இயக்குனர் அமீர் நடித்திருக்கிறார். அவர் வில்லனாக இதில் சில நிமிடங்கள் வரும் சிறிய காட்சியில் நடித்துள்ளார். படம் வெளியாகும் நேரம் வரை அமீர் இந்த படத்தில் இருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பட புரமோஷன் என்று எதிலும் அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை.

படக்குழு இவருடைய கதாபாத்திரத்தை மட்டும் சஸ்பென்ஸாக மெயின்டன் பண்ணி இருக்கின்றனர். படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாவிட்டாலும் அமீர் வரும் அந்த காட்சி ஆச்சரியமாக இருந்ததாக தற்போது சோசியல் மீடியாவில் தனுஷின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.