மார்பகத்தை பற்றி தவறான கேள்வி கேட்ட ரசிகர்.. செருப்படி பதில் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளார். எப்போதுமே சோசியல் மீடியாவை படு ஆக்டிவாக இருக்கும் இவர் தன் ரசிகர்கள் பதிவிடும் அனைத்து கமெண்ட்களையும் படித்து அவர்களுக்கு ரிப்ளை செய்வார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் என தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டிருந்தார். இதனிடையே நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொதித்து எழுந்துள்ளார் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2, நடிகர் விக்ரமின் கோப்ரா, அதர்வாவின் குருதி ஆட்டம் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் பொம்மை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் வெப்சீரிஸில் நடிக்க தற்போது ஆயத்தமாகி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பிளட் மணி வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் தன்னுடைய அடுத்த வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டோத்தா என பெயர் வைத்துள்ள இந்த வெப்சீரிஸில் மலையாள நடிகை பார்வதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டு சென்ற பிரியா பவானி சங்கர் தன்னுடைய ரசிகர்களிடம் கேள்வி பதில் கேளுங்கள் என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் ரசிகர்கள் பலர் முண்டியடித்துக்கொண்டு பல கேள்விகளை கேட்டனர். முக்கியமாக நீங்கள் சிறுவயதில் சாப்பிட்ட தின்பண்டங்கள் எது என்ற கேள்விக்கு, தனக்கு பாக்கெட்டில் வரும் ஒரு ரூபாய் ஐஸ் இன்றுவரை மிகவும் பிடித்தமான தின்பண்டம் என தெரிவித்தார்.தற்போது உள்ள நடிகர்களில் உங்களை ஈர்த்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, நடிகர் தனுஷ் என்றும் எந்த இயக்குனர்வுடன் பணியாற்ற ஆசை என எழுப்பப்பட்ட கேள்விக்கு வெற்றிமாறன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் நெட்டிசன் ஒருவர் உங்களுடைய அந்தரங்க உறுப்பின் சைஸ் என்ன என கேள்வி கேட்க அதற்கு கொஞ்சம் கூட அசராமல் பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். என்னுடையது 34d பிரதர், நான் இதனை வேறு ஒரு கிரகத்திலிருந்து வாங்கினேன். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்க்கும் பெண்களிடம் கூட இது இருக்கும், உங்களால் முடிந்தால் அவர்கள் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டை உற்றுநோக்கி கவனித்து பாருங்கள், குட்லக் என சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் பெண்களுக்காக ஏதேனும் கருத்துக்களை பதிவிடுங்கள் என கேட்டதற்கு, பெண்களாகிய நீங்கள் நன்றாக உழையுங்கள், உங்களை நீங்களே மதியுங்கள், யாரையும் சார்ந்து வாழாதீர்கள் உங்களுக்கான தேவையை நீங்களே பூர்த்தி செய்யுங்கள் என பிரியா பவானி சங்கர் தெரிவித்தார். மேலும் உங்களுக்கான சிறகில் சுதந்திரமாக பறந்து செல்லுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.