மார்க்கெட் குறைந்தாலும் கைவசம் தொழில் இருக்கு.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நடிகைகள்

சினிமாவை பொருத்தவரை படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. படங்களை தவிர பிற தொழிலகளிலும் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். முன்பெல்லாம் ரியல் எஸ்டேட் தொழிலில் தான் பல நடிகைகள் முதலீடு செய்து வந்தார்கள்.

தற்போது ரியல் எஸ்டேட் மட்டும் இன்றி அனைத்து தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா சாய் வாலே என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இது தவிர தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் என்ற படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் பல நகரங்களில் வீடுகள் மற்றும் சொகுசு கார்களை வாங்கி குவித்துள்ளாராம் நயன்தாரா. இவர் மட்டுமல்ல வளர்ந்து வரும் இளம் நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் தற்போதே கர்நாடகா, மும்பை, கோவா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பங்களாக்களை வாங்கி குவித்துள்ளார்.

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டில் தீபிகா படுகோன், கஜோல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகைகளுமே கிடைக்கும் இடங்களில் எல்லாம் வீடுகளை வாங்கி வருகிறார்கள். இந்த விஷயத்தில் சமந்தாவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். பல நகரங்களில் வீடுகளை வாங்கி வைத்துள்ளாராம். சினிமாவைத் தவிர பல தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருகிறார் சமந்தா.

இவை எல்லாமே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம். ஆம் சினிமாவை பொருத்தவரை எப்போது என்ன நடக்கும் என்றே கூற முடியாது. இன்று உச்சத்தில் இருக்கும் நடிகை நாளையே மார்க்கெட் குறைந்து பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படலாம். எனவே ஒருவேளை மார்க்கெட் குறைந்து பட வாய்ப்புகள் இல்லாவிட்டால் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டலாம் என்பதுதான் இவர்களின் திட்டமாம். எப்படியெல்லாம் யோசிக்குறாங்க…..?