மார்க்கெட் இல்லாமலே ஓவர் கெத்து காட்டும் ஆண்ட்ரியா.. தலை தெறித்து ஓடிய முதலாளிகள்

சென்னையில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர் நடிகை ஆண்ட்ரியா. அவர் அந்நியன் திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழில் ஒரு சில படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

இதன்பிறகு சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை போன்ற திரைப்படங்களில்இவர் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 3 படம் பரவலான வெற்றியை பெற்றது. ஆண்ட்ரியா பதினைந்து வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருகிறார். ஆனால் மிகவும் குறைந்த அளவிலான படங்களே இவர் நடிப்பில் வெளி வந்துள்ளது.

அதற்கு ஒரு காரணமும் உண்டு. ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் தன்னுடைய சம்பளம் தவிர மேலும் பல செலவுகளை தயாரிப்பாளரின் தலையில் கட்டி விடுவாராம். இவர் தனக்கென ஸ்பெஷல் ஹேர் டிரஸ்ஸரை  மும்பையிலிருந்து வர சொல்லுவாராம்.

அந்த நபரின் பிளைட் டிக்கெட் மற்றும் தங்கும் செலவு உட்பட அனைத்தும் தயாரிப்பாளர் தான் பார்க்க வேண்டுமாம். இதுதவிர ஆண்ட்ரியாவின் உதவியாளருக்கு என்று தனி சம்பளம் வேறு கொடுக்க வேண்டுமாம்.

மார்க்கெட் மற்றும் பாப்புலாரிட்டி இல்லாத இவருக்கு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனாலேயே தயாரிப்பாளர்கள் பலரும் ஆண்ட்ரியாவை தங்கள் படத்தில் தற்போது புக் செய்வதில்லை என்ற ஒரு கருத்து சினிமா வட்டாரத்தில் நிலவி வருகிறது.

சூர்யாவை நெருங்கிய சிவகார்த்திகேயன்.. டாக்டர் பட வெற்றியால் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்கில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூல் ...