மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த ஃபகத் ஃபாசில்.. என்ன ரோல் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவதாக முன்னணி நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.

மேலும் இப்படம் நடிகர் தனுஷுக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் மாரி செல்வராஜ் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் எடுக்குமாறு கேட்கவே துருவ் படத்தை ஓரம்கட்டி விட்டு உதயநிதி படத்திற்கான பணியில் இறங்கினார் மாரி செல்வராஜ்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., வாக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியலில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இனி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள உதயநிதி நடிப்புக்கு குட் பை சொல்ல போகிறாராம். எனவே தனது கடைசி படம் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என்பதால் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாராம்.

மேலும் 40 நாள்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

அவர் வேறு யாருமல்ல இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக முக்கிய அடையாளம் பெற்றிருக்கும் ஃபகத் பாசில் தான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் பகத் ஃபாசில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் படம் நிச்சயம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெரிந்தே அபிநய்யை காப்பாற்றாத பிரியங்கா.. என்ன ஒரு வில்லத்தனம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சிகள் தற்போது 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது ...