தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தினை வரும் தீபாவளி அன்று வெளியிடுவதாக அறிவித்தனர். இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்பு பொருத்தவரை சமீபகாலமாக எந்த ஒரு விழாக்களும் சரி பட புரோமோஷன் சரி சிம்பு 9 நம்பரை வைத்து தான் வெளியிட்டு வருகிறார். இதனால் சிம்பு இன்னும் நயன்தாராவை மறக்கவில்லை மேலும் அவருடைய நம்பர் வைத்தால் தான் படமும் வெற்றி அடைகிறது என்பதற்காகத்தான் இதனை தொடர்ந்து செய்து வருகிறார் சிம்பு.

இந்த விஷயம் சிம்புவின் காதுக்கு சென்றாலும் அதனை அவர் மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை, தற்போது கூட மாநாடு படத்தின் அறிவிப்பினை 11.25 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனை கூட்டினால் கூட 9 தான் வருகிறது என பலரும் கூறி வருகின்றனர்.

ஒவ்வொரு விஷயத்திலும் வித்தியாசம் காட்டும் சிம்பு ஏன் இதனை மட்டும் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார். அப்படி என்றால் இவரால் முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தற்போது வரை சிம்பு அவதிப்படுகிறார என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஆனால் சிம்பு இதனை பற்றி இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் இணையவாசிகள் அதற்கு இது தான் காரணம் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

மாநாடு படக்குழுவினரும் எது எப்படியோ படம் வெற்றி அடைந்தால் போதும் எங்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை என சிம்புவின் செயல்களுக்கு இணங்க சம்மதித்து வருகின்றனர். அண்ணாத்த, வலிமை படத்துடன் சிம்புவின் மாநாடு படம் தீபாவளிக்கு வெளிவருவதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.