மாநாடு இந்த படத்தின் அட்ட காப்பிதான்.. கையும் களவுமாக மாட்டிய வெங்கட்பிரபு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர். ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் எந்த படத்தின் சாயலில் என்பதனை ரசிகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.

அப்படித்தான் மாநாடு படம் பிரபல மலையாள படத்திலன் அட்டக்காப்பி என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதாவது திலிப் குமார் நடிப்பில் வெளியான ராமலீலா படம் அரசியலை மையமாகக் கொண்டு வெளியானது. இப்படம் ரசிகரின் ஆதரவால் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது.

இந்த படத்தின் அட்ட காப்பி தான் மாநாடு படம் என சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் கூட மாநாடு படத்துடன் ஒப்பிட்டு போவதாக கூறுகின்றனர். இதனால் தற்போது படக்குழுவினர் அதெல்லாம் கிடையாது இப்படம் வேறொரு கதை என சமாளித்து வருகின்றனர்.

ஆனால் நெட்டிசன்கள் பலரும் இரு படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஒன்றாக வைத்து துருவி துருவி சமூகவலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். அதனால் தற்போது வெங்கட் பிரபு படத்தை சீக்கிரமாக வெளியிட வேண்டும் இல்லையென்றால் இந்த மாதிரியான தேவையில்லாத பிரச்சினைகள் வருமென தயாரிப்பாளரிடம் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சிம்பு ரசிகர்கள் அரசியல் படம் என்பது மற்றொரு படத்தின் சாயல் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். அதற்காக அந்தப் படத்தின் கதை என கூறுவது சரியில்லை என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் படம் என்றாலே எப்படியும் மற்றொரு அரசியல் கட்சியை மையமாகக் கொண்டுதான் கதை அமையும் எனவும் கூறி வருகின்றனர்.

பெண்கள் மனதை கவர்ந்த மேடி.. தவிர்க்க முடியாத 5 படங்கள்

சினிமாவில் தற்போது வரை அதிக பெண் ரசிகர்களை வைத்துள்ள ஒரு நடிகர் என்றால் அது மாதவன் தான். தன்னுடைய இளமையான தோற்றம், அழகான சிரிப்பு மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவருடைய துள்ளலான நடிப்பால் ...
AllEscort