தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. மாறுபட்ட கதை களத்தில் உருவாகி இருந்த மாநகரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் பிரபல இயக்குனராக வலம் வந்தார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளியான கைதி படம் தாறுமாறான வெற்றி பெற்றது. கார்த்தி நாயகனாக நடித்திருந்த இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பட்டித்தொட்டியெங்கும் கைதி படம் வெற்றி பெற்றதையடுத்து லோகேஷ் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பட்டியலிலும் இணைந்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்றாவதாக தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. தற்போது லோகேஷ் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் டிவிட்டர் பக்கத்தில் அவரது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அதில் ரசிகர் ஒருவர் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கு என கூறினார். அதனை கேட்ட லோகேஷ் அப்படியா என்ன ஒற்றுமை என கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரசிகர், “மூன்று படங்களுமே கமல் படங்களை முன்னுதாரணமாக கொண்டு உருவானது. மேலும் மாநகரம் படத்தில் சந்தீப் பேருந்தில் இருந்து குதித்து இருப்பார். கைதி படத்தில் கார்த்தி லாரியிலிருந்து குதித்தார். மாஸ்டர் படத்தில் விஜய் ஆட்டோவில் இருந்து குதித்தார்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்கள். இந்த டிவிட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.