மாடர்ன் உடையில் கெத்து காட்டிய அதிதி ஷங்கர்.. ராஜமௌலியுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் பல பிரச்சனைகளுக்கு பின்னர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ள நிலையில் சங்கர் அவரது அடுத்தப்பட வேலையை தொடங்கி விட்டார்.

தற்போது ஷங்கர் மற்றும் ராம் சரண் முதன் முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘RC 15’ என பெயர் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் பிரபல இயக்குனர் ராஜமெளலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ராஜ மெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பின்னர் ராம் சரணின் மார்க்கெட் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ஆஸ்தான நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் என்பதாலும், சங்கர் தனது அபிமான இயக்குனர் என்பதாலும் இயக்குனர் ராஜமெளலி அன்புக்காக இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளாராம். அதேபோல் சங்கர் இயக்கத்தில் தமிழில் வெளயாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ரன்வீர் சிங் தான் நடிக்க உள்ளாராம். அதனால் தான் அவரும் இப்படத்தின் பூஜையில் பங்கேற்றுள்ளார்.

இதுவரை ஏஆர்.ரஹ்மான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்த சங்கர், இப்படத்தில் முதன் முறையாக தான் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் தமனை நியமித்துள்ளார். தற்போது தெலுங்கு சினிமாவில் தமன் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் பூஜைக்கு மகள் அதிதி கவர்ச்சியான உடையில் வந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.