மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த்சாமி.. வித்தியாசமான தோற்றத்தில் வெளிவந்த வைரல் போஸ்டர்

90களில் சாக்லேட் பாயாக வலம்வந்தவர் நடிகர் அரவிந்தசாமி. இவர் 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் ரோஜா படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைத்து மக்களையும் கவர்ந்தார்.

இதன்பின் தமிழில் பல படங்களில் நடித்த அவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் இவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இப்படத்திற்குப் பின் 2013ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் நடித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதையடுத்து இவருக்கு புதிய வாய்ப்புகள் குவிந்து வந்தது. தற்போது தமிழில் இவர் சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், கள்ளபார்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுதவிர வணங்காமுடி, புலனாய்வு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 1996ல் வெளியான ‘தேவராகம்’ எனும் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் இவர் நேரடி மலையாள படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்க்கு ஒட்டு என பெயரிட்டுள்ளனர். இதில் குஞ்சக்கோ போபன் உடன் இணைந்து அரவிந்தசாமி மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகைகள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து அரவிந்த்சாமி மீண்டும் மலையாள சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.