தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. இதற்கு முன்னதாக தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

கல்லூரி படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு  தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன. அயன், வீரம், தர்மதுரை, படிக்காதவன், வேங்கை, தேவி, ஸ்கெட்ச் படங்களில் நடித்துள்ளார். தமன்னா முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். கார்த்திக்குடன் பையா, சிறுத்தை படங்களில் நடித்தார்.

இவர்கள் ஜோடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பாகுபலி படத்தில் நடித்திருந்தாலும் அனுஷ்காவிற்கு தான் வலுவான கதாபாத்திரம் கிடைத்தது. தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் சேர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்தார்.

பிறகு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் ஆர்வம் காட்டி வந்தார். டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரிலும் நடித்தார். ஜெமினி டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன அழுத்தத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக கூறவில்லை. தமன்னாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால்  தற்போது ஆர்கானிக் உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம். தமன்னா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக உள்ளாராம். அடுத்த ஓராண்டுக்குள் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கலாம்.