மனோரமாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பிரபல இசையமைப்பாளர்.. இவர் இல்லைன்னா படம் நடித்திருக்க முடியாது

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏற்று நடித்தவர் மனோரமா. இவரது நடிப்பில் வெளியான அனைத்து கதாபாத்திரங்களும் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

மனோரமாவை சினிமாவில் ஆச்சி எனதான் அழைத்து வந்துள்ளனர். ஏனென்றால் இவர் ஏற்று நடித்த ஆச்சி கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று கொடுத்தது. கண்ணதாசன் தான் மனோரமாவை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

மனோரமா சிறு வயதில் நல்லா பாடுவாராம், மேடைகளில் பல பாடல்கள் பாடியுள்ளார். அப்போது ஒருமுறை பாட்டை கேட்ட கண்ணதாசன் நடிக்க கூட்டிட்டு வந்துள்ளார். அதன்மூலம் தான் சினிமாவில் நடிகையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

நடிக்கத் தொடங்கிய காலத்திலேயே அந்த வருடத்தில் அறிமுகமான நடிகைகளில் மனோரமா முதலிடத்தில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் பாட்டு, டான்ஸ் என எந்தத் துறையிலும் பின்னிப பெடல் எடுத்து விடுவார் என மனோரமா உடன் கூட நடித்த சக நடிகைகள் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

அதுவும் அன்பே வா படத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் நடித்த காட்சிகள் இன்று வரை ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இவர்களது காம்போவில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் இன்றுவரை நீங்காமல் இடம் பிடித்துள்ளன. மனோரமா 1000 படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சாதனையில் அறிமுகபடுத்திய கண்ணதாசனுக்கும் ஒரு சிறிய பங்கு உண்டு என பலரும் கூறி வருகின்றனர்.

பாரதியை வச்சு செய்யும் கண்ணம்மா.. டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலேயே சீரியலை ஓட்டும் இயக்குனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் அதிகம் கலாய்க்க பட்டாலும் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது பல எதிர்பாராத சம்பவங்களுடன் ...