மனைவியின் சித்திரவதையை தாங்க முடியாத தாடி பாலாஜி.. மீண்டும் கமலிடம் சென்ற பஞ்சாயத்து

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தாடி பாலாஜி, தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிலும் முக்கியமாக கலக்கப்போவது யாரு , பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வரும் நிலையில், தன்னுடைய மன அழுத்தத்தைப் பற்றி உலக நாயகன் கமல்ஹாசனிடம் தெரிவித்து வருவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக தகவல் வெளியானது. ஆனால் சமீப காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகள் போஷிகா தற்போது தாய் நித்யாவிடம் வாழ்ந்து வரும் நிலையில் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு தாடி பாலாஜி வலியுறுத்தி வருகிறார்.

இதை ஏற்காத நித்தியா தன் குழந்தையுடன் சமூகவலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் தன் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் குழந்தை நல உரிமை ஆணையத்தில் தன் மனைவி நித்யாவிற்கு எதிராக தாடி பாலாஜி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கமலஹாசன் இருவரையும் அழைத்து சமரசம் பேசி உள்ளார்.

அதில் உங்கள் இருவரால் குழந்தை போஷிகா பாதிக்கப்படாமல் இருக்க அவரை ஊட்டியில் உள்ள பள்ளியில் சேர்த்து விடுங்கள். வாரம் ஒருமுறை அவரை சென்று நீங்கள் இருவரும் பார்த்து வாருங்கள், அப்படி இல்லை என்றாலும் நான் உங்கள் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என கமலஹாசன் கூறியுள்ளதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் மன அழுத்தத்தில் இருந்த தாடி பாலாஜி மதுபோதைக்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளதாக தெரிவித்தார்.

நான் குடிப்பழக்கத்தில் உள்ளதால் கோபப்படுகிறேன் என கூறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் அது உண்மையில்லை, கோபம் என்பது மது அருந்தினாலும் அருந்தாவிட்டால் வரக்கூடிய ஒன்று. ஆனால் இப்போது என் மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் உள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் அளவிற்கு இமயமலை சென்று மன அழுத்தத்தை குறைக்க முடியவில்லை என்றாலும் என்னால் முடிந்த திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு வருகிறேன். தற்போது எந்த விதமான பிரச்சனைகளுக்கும் நான் செல்லாமல் இருக்கிறேன் என்று பாலாஜி அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பல நெட்டிசன்கள் கவலைப்படாதீங்க பாலாஜி எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்ற கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.