ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் செல்லமாக அடைமொழி வைத்து அழைப்பது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என அழைக்கப்படுபவர் தான் விஜயகாந்த். இவரை கேப்டன் என கூறினால் தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இவரது பெயரைவிட கேப்டன் என்ற பெயர் தான் பிரபலம்.

கோலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் மட்டுமே. ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கே டப் கொடுத்தவர் தான் விஜயகாந்த். இவரது படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன. திரையரங்குகளில் நூறு நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தன.

கடந்த 1979ஆம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை படம் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கிய விஜயகாந்த் தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், அம்மன்கோவில் கிழக்காலே, உழவன் மகன் என அடுத்தடுத்து வெற்றி படங்களை வழங்கி முன்னணி நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்று சாதனை புரிந்தார். இதுவரை எந்த நடிகரும் ஒரே ஆண்டில் இத்தனை படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் அரசியலில் இறங்கிய காரணம் தெரியுமா?

சினிமா மட்டுமே தனது கனவு என்று இருந்த விஜயகாந்தை அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுத்திய அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான். கடந்த 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேமலதாவை நடிகர் விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே அவர் வாழ்க்கை மாறியது. அதுவரை சாதாரண நடிகராக மட்டும் இருந்த விஜயகாந்த் ஒரு அரசியல்வாதியாக உருவெடுத்தார்.

2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) என்ற கட்சியை விஜயகாந்த் தொடங்கினார். அதுமட்டும் இன்றி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் விஜயகாந்த் தான் எதிர்கட்சி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கல்லூரி, திருமண மண்டபம் போன்றவற்றையும் தொடங்கினார். நடிகராக இருந்த விஜயகாந்தை அரசியல்வாதி மற்றும் தொழிலதிபராக மாற்றிய பெருமை அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்தையே சேரும்.