மதுரையில் தவித்து நின்ற ரஜினிகாந்த்.. உதவி செய்து காப்பாற்றிய காமெடி நடிகை

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்று இன்று புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்காக எதையும் செய்யும் அளவுக்கு அவரின் மீது வெறித்தனமான அன்பு காட்டும் ரசிகர்கள் ஏராளம் உண்டு.

அப்படிப்பட்ட ரசிகர்கள் இவரை நேரில் கண்டால் என்ன நடந்திருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் பல வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்து இருக்கிறது. ஒருமுறை ரஜினிகாந்த் மதுரையில் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார்.

சாதாரண நாட்களிலேயே அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதில் சூப்பர் ஸ்டார் அங்கு வந்திருக்கிறார் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம். ரஜினி வந்து இருப்பதை கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் அவரை காண்பதற்காக கோவிலின் முன்பு படை எடுத்து வந்துள்ளனர்.

இதனால் கோவில் வளாகமே ரசிகர்கள் கூட்டத்தால் திணறிப் போய் இருக்கிறது. அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் ரஜினியிடம் உங்கள் நட்சத்திரம், கோத்திரம் கூறுங்கள் அர்ச்சனை செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் ரஜினிக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதாம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திணறியபடி நின்றிருக்கிறார். அந்த இக்கட்டான சமயத்தில் அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட காமெடி நடிகை சச்சு அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

எப்படி என்றால் பெருமாளின் நட்சத்திரமான திருவோணம் தான் ரஜினியின் நட்சத்திரம் அதனால் அதற்கு அர்ச்சனை செய்யுங்கள் என்று அவர் ஐயரிடம் கூறியிருக்கிறார். அவர் கூறியபடியே அர்ச்சகரும் அர்ச்சனை செய்து கொடுத்திருக்கிறார். இக்கட்டான நிலையில் உதவி செய்த சச்சுவிற்கு ரஜினி பிறகு நன்றி தெரிவித்திருக்கிறார்.