மதுமிதாவுக்கு மட்டும் ஓர வஞ்சகம் செய்த பிக்பாஸ்.. சுயநலமாக மாறிய சக போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நேற்று தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்தமான உணவை சமைத்து, அதனுடன் ஒரு கடிதத்தையும் வழங்கினார்கள்.

அப்பொழுது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய உணவுகளை திறந்து, அதில் இருக்கும் கடிதத்தை சுவாரசியமாக படித்து, ஆனந்தக் கண்ணீருடன் சக போட்டியாளர்களுக்கு உணவை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜெர்மனியில் இருந்து வந்த மதுமிதாவுக்கு மட்டும் அவருடைய வீட்டிலிருந்து உணவு வராமல் தூரத்து உறவினர்கள் இருந்து வரவழைக்கப்பட்டது. இது கூட பரவாயில்லை அவர்களுடைய அம்மா, அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருக்கும் என்று எதிர் பார்த்த போது ஏதோ ஒரு மூன்றாவது நபர் மதுமிதாவிற்கு கடிதம் எழுதியது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

அத்துடன் மதுமிதா, எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்ணிட்டாங்க என்று கதறி கதறி அழுதார். அத்துடன் என்னுடைய வீட்டிற்கு ஏதோ ஆயிடுச்சு போல, அதனாலதான் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நான் உடனே என்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று தேமி தேமி அழ ஆரம்பித்து விட்டார். எனவே மதுமிதாவின் ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது. ஆனால் அவருக்கு பரிந்துரையாக ஒரு போட்டியாளர்கள் கூட பிக்பாஸ் இடம் கேள்வி கேட்கவில்லை.

மதுமிதா வீட்டினரிடம் இருந்து கடிதமும், உணவும் வராமல் வேறு ஏதோ 3வது நபரிடமிருந்து வந்தது, அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் மதுமிதா அழுதபோது சக போட்டியாளரான பாவனி ரெட்டி, மதுமிதாவை சமாதானப்படுத்தி, இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார்.