மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டியே கோபி.. வசமாக சிக்கிய பிளேபாய்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு தனி அறை வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தற்போது கோபி தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வளவு நாள் தன்னுடைய அறையில் தனியாக இருந்து கொண்டு ராதிகாவுடன் இஷ்டத்திற்கு கடலை போட்ட கோபிக்கு தப்போது திடீரென்று பாக்யா தன்னுடன் தங்கி இருப்பதை மறந்து விட்டு வழக்கம்போல் ராதிகாவுடன் தூங்காமல் கூட விடியவிடிய பேசிக்கொண்டிருக்கிறான்.

இதைக் கண்டுபிடித்த பாக்யாவிற்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கிவிட்டது. அதுமட்டுமின்றி பாக்யா அதிகாலையில் குளிக்க சென்ற போது அவள் ரூமில் இல்லை என நினைத்துக்கொண்டு, கோபி ராதிகாவிற்கு போன் செய்து குட் மார்னிங் சொல்லிவிட்டு, டியர் என்று கொஞ்சி கொஞ்சி பேசுவதை திடீரென்று பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாக்யா கேட்டு விடுகிறாள்.

ஏற்கனவே கோபியின் நடவடிக்கை சரியில்லை என வீட்டு வேலைக்காரி செல்வி அடிக்கடி பாக்யாவிடம் சொல்வதும் அதற்கேற்றார் போல் தற்போது கோபியின் நடவடிக்கை மாறிக்கொண்டே இருப்பதால் பாக்யாவின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ஜிதமாகிறது.

‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பதற்கேற்ப கூடவே தங்கியிருக்கும் பாக்யாவிற்கு இனிவரும் நாட்களில் கோபியின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்க போகிறாள்.

அப்படியே பாக்யா, ராதிகா மற்றும் கோபியின் தகாத உறவு தெரிய வருமாயின் நிச்சயம் ராதிகா பாக்யாவிற்கு வில்லியாக மாறி தன்னுடைய இரண்டாவது வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள ராதிகாவின் மறுரூபம் வெளிப்படும்.