மணிரத்னம் இயக்கத்தில் சோடை போன படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் அளித்த 5 படங்கள்

80 களில் காதல் படம் என்றாலே அது பாரதிராஜாவின் படங்களாகத் தான் இருக்கும். பாரதிராஜாவுக்கு பிறகு காதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் மௌனராகம், பம்பாய், அலைபாயுதே போன்ற பல காதல் படங்களை தந்துள்ளார். ஆனால் இவர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொதப்பிய ஐந்து படங்களை பார்க்கலாம்.

ராவணன்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராவணன். ராமாயண புராணத்தை கருவாகக் கொண்டிருந்தாலும் ராவணனின் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளி காட்டியிருந்தார் மணிரத்தினம். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ராவணன் படம் தோல்வியை சந்தித்தது.

காற்று வெளியிடை: கார்த்தி, அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காற்று வெளியிடை. கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டு சித்திரவதை படம் ஒரு இந்திய பைலட்டின் காதல் கதை. இப்படத்தில் மணிரத்னம் காதல், தேசப் பற்று ஆகியவற்றை அதிகப்படியாக காட்டியிருந்தார்.

கடல்: கௌதம் கார்த்திக், துளசி ஆகியோரின் முதல் படமான கடல் படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். சாத்தானுக்கும், தேவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கடல் படம். ரோஜா, தளபதி, நாயகன் போன்ற படங்களை இயக்கிய மணிரத்னம் இடமிருந்து கடல் போன்ற படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஓகே கண்மணி: துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓகே கண்மணி. அலைபாயுதே படத்தை தற்போது உள்ள டிரெண்ட்க்கு ஏற்றார் போல் எடுத்திருந்தார் மணிரத்தினம். தாலி கட்டாமலே லிவிங் டுகெதர் இல் வாழும் இருவரின் வாழ்க்கை கடைசியில் எப்படி சாத்தியமாகிறது என்பதே இப்படம்.

செக்கச் சிவந்த வானம்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் வாரிசு சண்டையால் ஒருவருக்கொருவர் கொன்று கொள்கிறார்கள். நாயகன் படத்தைப் போல இப்படமும் கேங்ஸ்டர் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு வந்த ரசிகர்களுக்கு செக்கச் சிவந்த வானம் படம் ஏமாற்றத்தை அளித்தது.

அஜித் பட நடிகையை தூக்கிச்சென்ற பிக் பாஸ்.. பக்காவா ப்ளான் போட்ட கமல்ஹாசன்

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல தொகுப்பாளர்கள் மிகவும் சுவாரஸ்யமாக அந்த நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள். அந்தவகையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியும் மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றது. ...
AllEscort