மணிரத்தினத்தின் மாடர்ன் வெர்ஷனா இந்த மகான்.? சுட சுட வெளிவந்த விமர்சனம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெமினி, பீமா படங்களை தொடர்ந்து சீயான் விக்ரம் மீண்டும் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள படம் தான் மகான். வழக்கமாக சுப்புராஜ் படத்தில் இருக்கும் அதே டெக்கினிக்கல் டீம் மற்றும் நடிகர்கள் பலர் இதிலும் உண்டு, கூடவே துருவ் விக்ரம்.

கதை – காந்திய கொள்கைகளின் அடிப்படையில் வாழும் குடும்பத்தில் பிறக்கிறார் விக்ரம். அவர் சீட்டு ஆடுவது, சேட்டைகள் என செல்கிறது குழந்தை பருவம். 40 வயதில் காமர்ஸ் டீச்சர் வேலை, ரெயில்வேஸில் வேலை செய்யும் மனைவி சிம்ரன் மற்றும் தனது மகனுடன் வாழும் விக்ரம் வாழ்வில் ஏற்படுகிறது ட்விஸ்ட்.

தனுக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ நினைத்து சரக்கு, சீட்டாட்டம் என செல்ல மனைவி கோபித்துக்கொண்டு சென்று விடுகிறாள். தனது பால்ய நண்பன் பாபி சிம்மா மற்றும் அவன் மகன் சனத்துடன் கூட்டணி போடுகிறார் “காந்தி மகான்” விக்ரம். தமிழகத்தின் சரக்கு சாம்ராஜ்யத்தின் காட் பாதர் அவதாரம் எடுக்கிறார். தனது மகனை மிகவும் மிஸ் செய்கிறார் விக்ரம். அரசியல் வாதி முத்துக்குமார் உடன் இணைந்து வேற லெவல் செல்கிறது பிஸ்னஸ்.

இந்த நேரத்தில் போலீஸ் ஆபிஸராக என்ட்ரி தருகிறார் துருவ், தனி படை ஆஃபீசர். அம்மாவுக்கு தனக்கும் விக்ரம் செய்த அநீதிக்கு பழி வாங்குவதே இவரின் நோக்கம். மகனையும் விட்டுக்கொடுக்க முடியாமல், தனது நண்பர்களையும் பாதுகாக்க முடியாமல் விக்ரம் படும் திண்டாட்டம், போராட்டமே மீதி கதை.

சினிமாபேட்டை அலசல்– மும்முனை நடிப்பு போட்டி என்றே இப்படத்தை சொல்லலாம். விக்ரம், சிம்ஹா, துருவ் கலக்கிவிட்டனர். கூடவே சிம்ரன், சனத், முத்துக்குமார் கூடுதல் ஸ்பெஷல். ஸ்டைலிஷ் மேக்கிங், ஷார்ப்பான இசை மிகப்பெரிய ப்ளஸ்.

படம் 2 மணிநேரம் 42 நிமிடம், இதுவே இப்படத்திற்கு மைனஸ். ரொம்ப நாள் கழித்து விக்ரமை மாஸாக பார்க்க முடிகிறது. முதல் பாதி முழுக்க அவர் மட்டுமே. இன்டெர்வல் ப்ளாக் டான்ஸ் மற்றும் துருவின் மாஸ் என்ட்ரி திரை அரங்கில் பார்த்திருக்கும் பட்சத்தில் வேற லெவலில் இருந்திருக்கும்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – பல இடங்களில் நாம் என்ன நடக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இரண்டாம் பாதி சற்றே நம் பொறுமையை சோதிக்கிறது. காந்தியின் கொள்கைகளை பின்படுத்தும் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் விக்ரம் மற்றும் துருவ். ஒருவர் பக்கா குடிகார கேங்க்ஸ்டர் மற்றவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ். ஒன் லயனாக பார்க்கும் பொழுது சூப்பர் கதை தான், எனினும் மேக்கிங்கில் சற்றே சுமாராக தான் வந்துள்ளது.

துருவ் பாடிய பாடல், வாணி போஜன் எங்கே என்பது தெரியவில்லை. வேட்டை முத்துக்குமாரின் அசுர அரசியல் வளர்ச்சி, அடாவடி போலீசாக துருவ் என சில இடங்களில் அதிக லாஜிக் மீறல்கள்.

ரஜினிகாந்திற்கு ஒரு பேட்ட படம் போல விக்ரமிற்கு இப்படத்தை தயார் செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். மணிரத்தினத்தின் தளபதி படத்தின் மாடர்ன் வெர்ஷன் தான் இந்த மகான்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5 / 5