தீபாவளி என்றால் புத்தாடைகளும், இனிப்புகள், பட்டாசுகள் என பண்டிகை களைகட்டும். இதில் திரைப்பிரபலங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். இந்த தீபாவளிக்கு மங்களகரமான மஞ்சள் நிறமுடைய உடைகளை பெரும்பாலான நடிகைகள் அணிந்திருந்தார்கள்.

சினேகா: புன்னகை இளவரசி சினேகா, அவரது கணவர் பிரசன்னா மற்றும் இவர்களது குழந்தைகள் என சினேகாவின் மொத்த ஃபேமிலியும் மஞ்சள் கலர் டிரஸ்ல ரொம்பவும் அழகா இருந்தார்கள். சினேகா பொதுவா ஒரு சின்ன ஃபங்ஷன் இருந்தாலும் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியால ஷேர் பண்ணுவார். இந்த தீபாவளி போட்டோவ அவங்க இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவருக்கும் ஹாப்பி தீபாவளி என போஸ்ட் செய்திருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மீனா: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் மீனாவின் என்ட்ரியில் அவரது ரசிகர்கள் விசிலடித்து மகிழ்ந்தார்கள். தீபாவளி அன்று மஞ்சள் நிற புடவை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அத்துடன் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் அண்ணாத்த தீபாவளி கொண்டாட ரெடியா என பதிவிட்டிருந்தார்.

அமலா பால்: மஞ்சள் நிற உடையில் கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார் அமலா பால். ஆடை திரைப்படத்தில் பிறகு தமிழில் எந்த திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அமலாபால் அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவரது தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அமலாபாலின் முன்னாள் கணவர் ஏ எல் விஜய் அவர்களின் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவி: விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை சென்றார் சாய் பல்லவி. அதன் பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தீபாவளியை அம்மா, அப்பா, தங்கை என குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் சாய் பல்லவி. தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.