மகாவீர் கர்ணா படம் எப்பொழுது வெளிவரும்? 300 கோடி பட்ஜெட்ல ஆரம்பிச்சாங்களே!

தற்போது உருவாகியுள்ள மகான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இப்படத்திற்கு முன்பே விக்ரம் நடிப்பில் மகாவீர் கர்ணா படம் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த படத்தை ஆர் எஸ் விமல் இயக்கியிருந்தார். மேலும் விக்ரமுடன் இணைந்து சுரேஷ் கோபியும் நடித்திருந்தார். படத்தின் அறிவிப்பு வெளியானபோது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

மகாபாரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ஒரு சில காரணங்களால் தடைசெய்யப்பட்டது. பின்பு படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் கூறினர். அரசாங்கமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூற பின்பு ஒரு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர்.

ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை மற்றும் தேவையில்லாத சர்ச்சைகள் என தொடர்ந்து வந்ததால் வேறு வழியின்றி படப்பிடிப்பை அப்படியே நிறுத்தி வைத்தனர். பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இப்படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படம் இனியும் உருவாவதற்கு வாய்ப்பில்லை என தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விக்ரம் ரசிகர்கள் இப்படத்தை பெரிதுமாக நம்பியிருந்தனர். ஏனென்றால் விக்ரம் நடிப்பிற்கு இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக்கொடுக்கும் மற்றும் அவருக்கான தனி அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் என கூறி வந்தனர். இப்படி இருக்கும்போது மகாவீர் கர்ணா திரைப்படம் உருவாகாமல் போவது விக்ரம் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.