மகான் படத்தில் வாணிபூஜன் கதாபாத்திரம் ஏன் தூக்கப்பட்டது.. ரசிகர்களுக்கு விளக்கமளித்த கார்த்திக் சுப்புராஜ்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வதிருமகள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இத்தொடரின் மூலம் சின்னத்திரையில் நயன்தாரா என அழைக்கப்பட்டார். அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க பல படங்களில் நடித்து வருகிறார்.

வாணி போஜன் மகான் படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மகான். செவன் கிரீம் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மகான் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் வாணி போஜன் ரசிகர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளித்துள்ளது. மகான் படத்தின் டீசர், டிரெய்லர்களை வாணி போஜன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

மகான் படம் வெளியான பிறகு அப்படத்தில் ஒரு காட்சியில் கூட வாணி போஜனை காண முடியவில்லை. ஆனால் மகான் படத்தில் நடித்தவர்களின் பெயர் பட்டியலில் வாணிபூஜன் பெயர் இடம் பெற்றது. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட இடம் பெறாதது ரசிகர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இதற்கான காரணம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், விக்ரமுக்கு முதல் பாதியில் ஜோடியாக சிம்ரன் நடிப்பதாகவும், அதன்பிறகு இரண்டாம் பாதியில் விக்ரமுடன் தொடர்பில் இருக்கும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிப்பதாக இருந்தது.

படத்தின் ஒரு சில காட்சிகள் எடுத்த பிறகு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள காட்சிகள் எடுக்க முடியவில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் படத்தை பார்த்த ரசிகர்கள் படு மொக்கையாக இருப்பதாகவும், வாணி போஜன் நடித்திருந்திருந்தால் கொஞ்சம் படத்தை பார்த்து இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.