மகான் தியேட்டர் ரிலீசா? ஒடிடி ரிலீசா? விக்ரமை சூடேற்றிய தயாரிப்பாளர்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களுமே திரையரங்கில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் தற்போது விக்ரம் மகான் படத்தை முழுவதுமாக நம்பியுள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது தொடர்ந்து பல படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்திருக்கின்றனர். அண்ணாத்த, மாநாடு, வலிமை மற்றும் பீஸ்ட் போன்ற பெரிய படங்கள் அனைத்துமே திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதனால் மகான் படத்தை எப்போது திரையரங்கில் வெளியிடுவது என தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

ஆனால் மகான் படத்தின் தயாரிப்பாளர் அதிகப்படியான திரையரங்கு கிடைக்காவிட்டால் நேரடியாக OTTதளத்திற்கு படத்தை கொடுத்து விடலாம் என முடிவெடுத்துள்ளார். ஆனால் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என கூறியுள்ளனர்.

ஏனென்றால் திரையரங்கில் வெளியானால்தான் இருவருக்குமான வரவேற்பு அதிகமாக இருக்கும். OTTதளத்தில் வெளியானால் யாரும் பெரிதாக இப்படத்தை கண்டுகொள்ள மாட்டார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் நினைத்தபடி வரவேற்பு கிடைக்காது. அதனால் தயாரிப்பாளரிடம் ‘என் படம் ஒடிடியில் ரிலீசானால் என்னை ஒடிடி நாயகனாக மாற்றி விடுவார்கள் அதனால் மகான் படத்தைத் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும்’ என விக்ரம் கூறியுள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற தயாரிப்பாளரிடம் புலம்பி வருகிறார். மேலும் படம் திரையரங்கில் வெளியானால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா? என இயக்குனரிடம் கேள்வி கேட்டு வருகிறார். அதற்கு இயக்குனரும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என தயாரிப்பாளருக்கு உறுதியாக பதிலளித்துள்ளார். இதனால் தற்போது தயாரிப்பாளர் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.