மகளை நடிகையாக்க துடிக்கும் VJ அர்ச்சனா.. மளமளவென வளர்ந்து ஹீரோயினாக மாறிவரும் புகைப்படம்

விஜே அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பிறகு இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, செலிபிரிட்டி கிச்சன் மற்றும் மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் செம்பருத்தி, யாரடி நீ மோகினி, மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அர்ச்சனாவிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு இவர் கொஞ்சம் கொஞ்சமாக சேட்டை செய்ய ஆரம்பித்தார். இதனால் ரசிகர்களிடமிருந்து வரவேற்பு குறையத் தொடங்கியது. அதுவும் பிக்பாஸ் வீட்டில் அன்பு கேங் என்ற பெயரில் இவர் செய்த சேட்டை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

அதன்பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் தனது அன்றாட செயல்களை கூறி வந்தார். பின்பு பாத்ரூம் டூர் என்ற பெயரில் வீட்டில் இருக்கும் அனைத்து பாத்ரூம்களையும் சுற்றிக் காட்டினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அஞ்சனாவை கிண்டல் செய்து வந்தனர்.

அதன்பிறகு உடல்நலக்குறைவால் சிறிது காலங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும் டாக்டர் படத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்கலந்து கொண்டுள்ளனர்.

இதனை சாரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இப்புகைப்படத்தில் சாரா அழகாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். தற்போது சாரா வெளியிட்டுள்ள இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிமாநிலங்களில் வசூல் வேட்டையாடிய 10 தமிழ் படங்கள்.. காணாமல் போன அஜித்!

தமிழில் உருவான சில படங்கள் வெளிமாநிலங்களிலும் வெளியானது. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கும் அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களிலும் தமிழ் படங்கள் அதிக வசூலைப் பெற்றுள்ளது. அவ்வாறு 2022 ஆம் ஆண்டு ...