ப்ளூ சட்டை மாறனை மேடையில் வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்.. ஓவரா பேசுனா இப்படித்தான்   

சினிமாவில் வெளியாகும் படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் தனது யூடியூப் சேனல் மூலம் விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களின் படங்களையும் கேலி செய்து வருகிறார். அவ்வாறு இவர் கிண்டல் செய்து போடும் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு.

இதனால் சினிமா துறையை சார்ந்த பல பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறன் எச்சரித்தும், திட்டியும் வருகின்றன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரி. இவர் கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய போது அவர் இழந்த படவாய்ப்புகள் மற்றும் சினிமா விமர்சகர்களை எச்சரித்து பேசினார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாக முதலில் ஆரி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அந்தத் வாய்ப்பை தவற விட்டதாக கூறினார். அதேபோல் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வாய்ப்பையும் ஆரி தவறவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு பேசிய ஆரி, படத்தை தயாரித்து வெளியிடுவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதன் பின்புதான் அப்படம் மக்களுக்கு சென்றடைகிறது. ஆனால் சினிமா விமர்சகர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு காசு வருகிறது என்பதற்காக அந்தப் படத்தை பல கேலிகள் செய்து யூடியூப் சேனலில் வெளியிடுகின்றனர் என ஆரி குறிப்பிட்டார்.

முதலில் பேர் குறிப்பிடாமல் பொதுவாக கூறி வந்த ஆரி மிகுந்த கோபத்தால் ப்ளூ சட்டை மாறனன தான் குறிப்பிடுகிறேன் என நேராகவே கூறினார். ஆரம்பத்தில் மாறன் எங்கிருந்து வந்தார், எப்படி வந்தார் எனது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்மையில் வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் நடனத்தை பரோட்டாவுக்கு மாவு பிசைவது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கண்டனத்தை ஏற்படுத்தியது. இதனால் மாறன் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இதில் ரசிகர்களை தாண்டி பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதே வார்த்தையை குறிப்பிட்ட ஆரியும் ப்ளூ சட்டை மாறனை எச்சரித்துள்ளார்.