போலீஸ் ஸ்டேஷனில் கதறும் பாக்யா.. நினைத்ததை நடத்தி முடித்த பிளேபாய் கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சமைத்துக் கொடுத்த சமையலை சாப்பிட்ட 15 குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ராதிகாவின் பொறுப்பில் ஆசிரமத்திற்கு சாப்பாடு கொடுக்கப்பட்டதால் தற்போது ராதிகா, பாக்யா இருவரையும் போலீஸ் விசாரித்து கொண்டிருக்கிறது.

இதில் தன்னுடைய தப்பு எதுவும் இல்லை என ராதிகாவிடம் பாக்யா கெஞ்சி கிலறுகிறாள். இருப்பினும் பாக்யாவினால் தான் போலீஸ் ஸ்டேஷன் வரை வரும் நிலை ஏற்பட்டுள்ளது என ஏற்கனவே கோபி ராதிகாவிற்கு உசுப்பேற்றி விட்டதால் அதை மனதில் வைத்துக்கொண்டு ராதிகா, பாக்யாவை கண்டபடி திட்டுகிறாள்.

இருப்பினும் பாக்யா தன் தரப்பில் இருக்கும் நியாயத்தை ராதிகாவிடம் அழுதுகொண்டே சொல்லி புரியவைக்க முயற்சி செய்தாலும் ராதிகா பாக்யாவை அவமானப்படுத்தி அவள் சொல்வதை கேட்காமல் தட்டிக் கழிக்கிறாள்.

இது ஒருபுறமிருக்க பாக்யாவின் மகன் எழில் ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகியிடம் எதனால் தப்பு நடந்தது என்பதை விசாரிக்க முயற்சி செய்கிறான். ஒரு வேளை சாப்பாட்டிற்கு முன் ராதிகா குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்த லட்டுடின் மூலமாக இந்தத் தவறு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே எழில் ஆசிரமத்தில் துப்புத் துலக்கி அதைப் போலீசாரிடம் விவரித்துப் பாக்யாவை இந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிக்கப் போகிறான். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பிறகு பாக்யா-ராதிகா இருவரது நட்பு நிச்சயம் உடைய போகிறது.

ஆகையால் இந்த நேரத்தை கோபி சரியாக பயன்படுத்தி ராதிகாவை இனி வரும் நாட்களில் பாக்யாவிற்கு எதிராக செயல்படக்கூடிய வில்லியாக மாற்றப் போகிறான். ஆகையால் இனிதான் பாக்கியலட்சுமி சீரியல் சூடுபிடிக்க போகிறது.