போலீஸ் உடை, கொழுந்து விட்டு எரியும் தீ.. உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்

ஆரம்பத்தில் காமெடி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் கடைசியாக நிமிர், மனிதன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக இந்த இரண்டு படங்களிலும் உதயநிதி ஸ்டாலினின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது. அதுமட்டுமில்லாமல் சைக்கோ என்ற வணிகரீதியான வெற்றிப் படத்தையும் கொடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் z15 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைத்துள்ளனர். காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கையில் தெரிகிறது. ஏதோ ஒரு நெஞ்சை உறைய வைக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது என்பது மட்டும் உறுதி.

நெஞ்சுக்கு நீதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கண்டிப்பாக அருண்ராஜ் காம ராஜாவுக்கு இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.