போயஸ் கார்டனில் ரஜினியை நேரில் சந்தித்த அதிதி ஷங்கர்.. உடலை ஒல்லியாக காட்ட நடந்த கிராபிக்ஸ் ஒர்க்கா.?

தமிழ் சினிமாவில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் தற்போது அவரது மகள் அதிதியை நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது திறமையை நிரூபித்த ஷங்கரின் மகள் அதிதி ஒரு நடிகையாக அவரது திறமையை நிரூபிக்க களமிறங்க உள்ளார். அதுவும் இவர் அறிமுகமாகும் முதல் படமே பிரம்மாண்ட கூட்டணியில் உருவாக உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் நடிகர் கார்த்திக் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த சமயத்தில் தொடர்ந்து தோல்விப் படங்களை வழங்கிவந்த கார்த்திக்கு கொம்பன் படம் ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் படமாக அமைந்தது.

தற்போது இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படத்திற்கு விருமன் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் தான் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளார். இதன் மூலமே அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா அவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ள அதிதிக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய அதிதி அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.

முதல் முறையாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளதால், சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ரஜினியும், அதிதியும் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விருமன் படத்தில் ஒல்லியாக காட்டுவதற்காக கிராபிக்ஸ் ஒர்க் நடந்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். ஏனென்றால் தற்போது நேரில் பார்க்கும்போது சற்று உடல் பருமனாகி குண்டாக தெரிகிறதாம்.

தோல்வியால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட நிலை.. உண்மையை உளறிய பிரபல இயக்குனர்

சிவகார்த்திகேயன் சினிமாவில் அடிமட்டத்திலிருந்து ஜெயித்து வந்தவர் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் சின்ன, சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அதன்பின் சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக வளர்ந்துள்ளார். சினிமாவில் ஏற்றத்தாழ்வு எல்லாருக்கும் இருக்கும். ...