போட்ட காசை எடுப்பதற்கு கேவலமான வேலை செய்த வெங்கட்பிரபு.. மொத்த கேரியரே கிளோஸ்

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது மன்மதலீலை என்ற படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் வெங்கட்பிரபு. தற்போது அந்த படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவர் எப்போதுமே 3 ஹீரோயின்கள் குறையாமல் நடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், பிட்டு படத்தை மிஞ்சுவது போன்று முத்தக் காட்சிகளை வைத்து இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதுவும் டீசர் முழுக்க உதட்டை எடுக்காமல் அசோக் செல்வன் மன்மதலீலை நடத்தியுள்ளார்கள். இயக்குனர்களுக்கு சமுதாயத்தில் பொறுப்பு இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்படி சமுதாயத்தை இளசுகளின் மனதில் நஞ்சை பதிக்கும் அளவில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் இவரை கூப்பிட்டு கதை கேட்டு உள்ள இந்த சூழ்நிலையில் போட்ட காசை எடுப்பதற்காக இப்படி ஒரு கேவலமான வேலை செய்துள்ளார் வெங்கட் பிரபு.

இதனால் அசோக்செல்வன் கேரியர் கிளோஸ் ஆவதற்கு கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா எப்படி ஆபாசமான படங்களை எடுத்து வருகிறாரோ அதேபோல் வெங்கட்பிரபு மாறியுள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

டீசரே இப்படி இருந்தால் படம் கண்டிப்பாக பிட்டு படத்தை மிஞ்சும் அளவுக்கு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதுபோன்ற சர்ச்சையை கிளம்ப வேண்டும் என்பதற்காகவே தனது தயாரிப்பில் இந்த படத்தை வெளியிட உள்ளார் வெங்கட்பிரபு என்பது தற்போது உறுதி ஆகிவிட்டது. இந்த ஒரே வீடியோவால் தனது மொத்த இமேஜையும் டோட்டலாக காலி செய்துவிட்டார் வெங்கட்பிரபு என்று ரசிகர்கள் ஒருபுறம் குழம்பித்தான் வருகின்றனர்.