போங்க பாஸ் உங்களுக்கு அந்த கேரக்டர் செட்டாகாது.. வில்லங்கமான செல்வராகவனின் பீஸ்ட் கதாபாத்திரம்

தளபதியின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கும் படம் தான் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் தரமாக தயாராகி வருகிறது. அரபிக்குத்து பாடலுக்கான புரோமோ வெளியானப் பிறகு, ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். நிச்சயம் செம்ம ட்ரீட் காத்துக் கொண்டு இருக்கிறது.

அதை விட அடிக்கடி பல அப்டேட்களை தந்து ரசிகர்களுக்கு தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டே இருந்தனர். அப்படி ஒரு கொடுத்த இன்ப அதிர்ச்சி தான் இந்த பீஸ்ட் படத்தின் வில்லனாக செல்வராகவன் களம் இறங்குகிறார் என்றவுடன் ஆஹா சூப்பர் இப்போதான் ஆட்டமே களை கட்டுகிறது என்று செல்வராகவனின் ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருந்தனர்.

செல்வராகவன் இயக்கிய படங்களுக்கு மட்டுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருடைய சிந்தனை நீளம் மிகப் பெரியது. அதனை அவரின் படங்களில் கண்கூடாக பார்க்க முடியும். அப்படிப்பட்ட இயக்குனர் நடிக்கப் போகிறார் என்பதே ஆச்சரியம். அதிலும் தளபதியின் வில்லன் என்னும் போது, எப்படி இருக்குமோ என்று யோசிக்க வைத்தது.

ஆனால், அதன் பிறகு வந்த தகவல் செல்வராகவன் ஒன்னும் வில்லன் இல்லப்பா..? அவர் அந்த படத்தில் ஹேக்கிங் செய்யும் தொழில்நுட்ப கலைஞராக வருகிறார் என்று சொல்லப்பட்டது. என்னடா இது இப்படி சொல்லிட்டீங்க என்று ஆகி விட்டது. அதன் பின் வந்த தற்போதைய தகவலில் அவர் விஜயின் நண்பராக வந்து ஹேக்கிங் செய்து வில்லனை பிடிக்க உதவும் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்று தற்போது தகவல் கசிந்து இருக்கிறது.

இதன் மூலம் செல்வராகவன் கதாபாத்திரம் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் அவர் சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக ஒரு திருடன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் அந்த படத்தின் பஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்

ஆனால் பீஸ்ட் படத்தில் ஒரு துண்டு சீட்டில் கூட செல்வராகவனின் கதாப்பாத்திரம் குறித்து புகைப்படம் வெளியாகவில்லை. அதனால் யூகிக்க கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் அந்த படத்தில் இருந்தால் போதும் என்றாகி விட்டது. அவரை சரியாக பயன்படுத்தி எஸ்.ஜே.சூர்யா போல ஒரு மிரட்டும் வில்லனை தமிழ் சினிமா கண்டது போல இன்னும் ஒரு வில்லன் கிடைத்தால் மகிழ்ச்சிதான்.