போங்கடா வெண்ணைகளா? புகழ் போதையின் உச்சியில் விஜய் சேதுபதி

சினிமாவில் வாய்ப்பு தேடும்பொழுது ஒரு பேச்சி, வாய்ப்பு கிடைத்தவுடன் ஒரு பேச்சி, வெற்றி பெரும்பொழுது ஒரு பேச்சி, தோல்வி அடையும் பொழுது ஒரு பேச்சி, பிரபலங்களை புகளும்போளுது ஒரு பேச்சி, இகழ்ந்து பேசும்பொழுது ஒரு பேச்சி, இப்படி பேச்சிகளில் பல விதம் இருக்கு.

இப்படி ஒரே ஒரு பேச்சில் இத்தனை நாள் பெற்ற நல்ல பெயரை கெடுத்து கொண்டு போய்விட்டார் ஒரு பிரபல நடிகர். அவர் வேறு யாருமில்லை நல்ல மனுஷன் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதிதான். ஒரு பேட்டியில் அவர் சொன்ன வார்த்தை ரசிகர்களையும் மீடியாவையும் கவலை அடைய வைத்துள்ளது.

விஜய் சேதுபதியை பேட்டி எடுக்கும் ஒரு பெண் அவரிடம் ‘விமர்சனங்களை எப்படி எதிர் கொள்விர்கள் என்ற கேள்விக்கு, ‘போங்கடா வெண்ணைங்களா என்று நினைக்க தோன்றும்’ என்று விஜய் சேதுபதி சிறிது கொண்டே செம காண்டாகி பதில் அளித்தார். இதுவே அவரை புகழும்போது மட்டும் நன்றாக தெரியும், இதுவே சில நெகடிவ் செய்திகளை வெளியிட்டால் வென்னையாக்தான் தெரியும் என மீடியாவும் கடுப்பாகி உள்ளனர்.

அது மட்டும் அவர் சொல்லல, போற வரவனுகெல்லாம் பதில் சொல்றது வேலையா என விஜய் சேதுபதி சொன்னது இன்னும் பலருக்கு கோபத்தைத்தான் வர வைத்தது. வாய்ப்பு கிடைக்கும் பொழுதும், ஆரம்பத்தில் இவர் அடைந்த தொடர் வெற்றிக்கும் பல மீடியாக்கள் புகழ்ந்து தள்ளினர். அப்பொழுதுலாம் ரசித்த விஜய் சேதுபதிக்கு இப்பொழுது கோபம் வர காரணம் என்ன என்று பார்த்தால் அதுக்கும் இவரேதான் காரணம்.

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய் சேதுபதி மற்ற எந்த அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் பொது மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்ததாக இல்லை. எதிலும் தலையிடவே மாட்டார். அப்படி இருக்கும்போது எந்த மீடியாவும் அவரை சீண்டவில்லை இந்த ரசிகர்களும் அவரை சீண்டவில்லை.

புகழின் உச்சியில் அடைந்த பின்னர் சில பல அரசியல் கிண்டல் பேச்சுகளும், அவருடைய சில கருத்துக்களுக்கும் எதிர்ப்புகள் வந்தது. அந்த எதிர்ப்பை சந்திக்க முடியாமல் மேடைப்பேச்சு, பேட்டிகள் என அனைத்திலும் அவருடைய சுயரூபம் வெளிவருகிறது எனவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களாக தெறிக்க விட்டனர்.

விஜய் சேதுபதிக்காக சிவகார்த்திகேயனை எல்லாம் பகைத்துக் கொண்டோமே என்றும் சில ரசிகர்கள் தற்போது கட்சி மாறி வருவதாகவும் செய்திகள் வருகிறது. எது எப்படியோ நன்றாக புகழ் அடைந்துவிட்டார் இனி கல்லா கட்டிக் கொண்டு தான் இருப்பார். ஆனால் அதுவே அவரை உச்சத்தில் வைத்த மீடியா எப்பொழுது நினைத்தாலும் கீழே இறக்குவது பெரிய விஷயம் அல்ல என்பது அவருக்குத் தெரியுமா என்றும் தெரியவில்லை. இது தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே உண்டு.