பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா செய்த செயல்.. ஆடி போன படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம் படங்களுக்கு தான் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

திரிஷாவிற்கு அதிகப்படியான மார்க்கெட் தற்போது இல்லாமல் இருந்தாலும் இவரது படங்கள் மீதான ஆர்வம் இப்போதும் ரசிகர்களிடம் அதிகமாகத்தான் உள்ளது. அதனால் தற்போது திரிஷா சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட திரிஷா காலணி அணிந்து கோயில் காட்சி நடித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு திரிஷா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. மேலும் திரிஷாவும் இதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. இப்படத்தில் திரிஷா முழுக்க முழுக்க தமிழ் டப்பிங்கை அவரே பேசி உள்ளதாக கூறியுள்ளனர். அதுவும் பழைய காலத்து சங்க தமிழ் மொழியை திரிஷா இவ்வளவு அழகாக பேசுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

விஸ்வாசம் இரண்டாம் பாகம்தான் அண்ணாத்த படமா? அது மாதிரி கேட்டா அதையே கொடுத்த சிவா

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் ...