பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த புது சிக்கல்.. குழம்பிப் போயிருக்கும் மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதன் பிறகு மணிரத்னம் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை மையமாக வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பல நடிகர்களை நடிக்க வைத்து வருகிறார். இப்படத்திற்கு தமிழில் பொன்னியின் செல்வன் என பெயர் வைத்துள்ளார். சமீபகாலமாக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான விபத்துகள் நடந்தேறின.

கங்கை நதிக் கரையில் உள்ள சிவன் சிலையின் முன்பு திரிஷா காலணிகள் அணிந்து வந்தது. மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரல் ஆனது. அதன் பிறகு படத்தில் குதிரை காட்சிகள் எடுப்பதற்காக உண்மையான குதிரைகளை நடிக்க வைத்துள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சில குதிரைகள் படப்பிடிப்பு தளத்தில் இறந்தனர்.

இதற்காகவும் மணிரத்தினத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் தலைப்பிற்கும் ஒரு சிக்கல் வந்ததாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழில் பொன்னியின் செல்வன் படத்தின் தலைப்பு அப்படியே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களில் பொன்னியின் செல்வன் தலைப்பிற்கு பதிலாக PS என வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் பெயரான பொன்னியின் செல்வன் தலைப்பை ஏன் ஹிந்தி போன்ற மற்ற மொழிகளில் வைக்கக்கூடாது என கேள்வி கேட்டும் வருகின்றனர். இதனால் தற்போது மணிரத்தினம் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸுக்கு பின் நேரலையில் வந்த பிரியங்கா.. எல்லா உண்மையும் இப்படி அவுத்து விட்டுட்டீங்களே

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜு அதிக வாக்குகளைப் பெற்ற தேர்வு செய்தார், அவரை தொடர்ந்து இந்த சீசனின் ரன்னர் ஆக விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கிடைத்தது. எனவே ராஜு ...