‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்’ பாடல் எப்படி உருவானது தெரியுமா.? இளையராஜா வெளியிட்ட சீக்ரெட்

‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் உருவான விதத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இசைஞானி இளையராஜா. சந்தானம் நடித்து வெளியாகியுள்ள டிக்கிலோனா படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ என்ற பாடலை ரீமேக் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. இப்பாடல் உருவானதை இளையராஜா வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

இளையராஜா பாடலுக்கு மெட்டு போடும் போது இயக்குனர் சீனிவாசனும், கமலஹாசனும் உடன் இருந்தனர். அப்போது வந்த கவிஞர் வாலி, இந்த மெட்டுக்கு ஏற்ப ஏற்கனவே திருவள்ளுவர் வரிகள் எழுதி உள்ளார் எனக் கூறினார்.

‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்ற குரலை வாலி கூறியுள்ளார். பின்பு பேர் வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் வரிகளை எழுதினார். இந்தப்பாடலை மலேசியா வாசுதேவன்-ஜானகி பாடியுள்ளனர். அப்போவே இந்த பாடல் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

இப்போது டிக்கிலோனா படத்தில் சந்தானம், அனேகா ரீமேக் பாடலுக்கு நடனமாடுகின்றனர், இது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இளையராஜாவின் இந்த வீடியோ பதிவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வில்லேஜ் குக்கிங் சேனலில் பங்கேற்கும் கமல்ஹாசன்.. விக்ரம் படத்தில் இந்த விஷயம் இருக்கா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்காக இயக்குனர் பல விஷயங்களை மெனக்கெட்டு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் போதே அதை நம்மால் யூகிக்க முடிகிறது. மேலும் லோகேஷ் கமலின் ...
AllEscort