பேய் மாமா படத்தில் நடிக்க இருந்தது வடிவேலுவா.? வெளியான ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் முக்கிய நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான அனபெல் சேதுபதி படம் தோல்வியை தழுவினாலும், அப்படத்தில் யோகி பாபுவின் காமெடி ஓரளவிற்கு ரசிக்கும்படி இருந்தது. தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றாலே அது யோகி பாபு தான் என்னும் நிலை உருவாகியுள்ளது.

காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வரும் யோகி பாபு நடிப்பில் பேய் மாமா எனும் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது பேய் மாமா படத்தில் நடிக்க முதலில் முன்னணி நடிகரான வடிவேலுவை தான் ஒப்பந்த செய்தார்களாம்.

அந்த சமயத்தில் வடிவேலு உச்சத்தில் இருந்த சமயம் என்பதால் சற்று திமிரில் ஆடிக்கொண்டிருந்தாராம். எனவே இவரை வைத்து படம் எடுத்தால் அந்த படம் வெளிவராது என நினைத்து வடிவேலுவிற்கு பதில் யோகி பாபுவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் வெளிப்படையாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிற்கு தடை விதித்த அந்த சில வருடம் தான் யோகி பாபுவின் வாழ்க்கையே மாறியது என கூறலாம். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட காமெடி நடிகர் வெற்றிடத்தை யோகி பாபு நிரப்பியது மட்டுமல்லாமல் மிகவும் கெட்டியாக பிடித்து கொண்டார். இனி யோகியை யாரும் அசைக்க முடியாது என்னும் அளவிற்கு அவரின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆனால் தற்போது நடிகர் வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டு அவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதுவும் வரிசையாக ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் காமெடி நடிகர்கள சற்று கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் வடிவேலு தனது இடத்தை மீண்டும் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் இறங்கிய மடோனா செபஸ்டியன்.. என்ன பொண்ணுடா!

கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும். வானம் கொட்டட்டும் ...
AllEscort