பேயாக மாறி வெளுத்து வாங்கிய கண்ணம்மா.. அரண்டு போன வெண்பா!

விஜய் டிவியில் மக்களை கவரும் வகையில் பல சீரியல்களை தொடங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.இந்நிலையில், பாரதிகண்ணம்மா என்னும் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த சீரியலில்  இன்றைய எபிசோடில், வெண்பா கண்ணம்மாவின் செயல்களை அவள் பேசிய விதத்தை அவள் கூறியதை எல்லாம் நினைத்து கொண்டே உறங்கி விடுகிறாள். அப்போது கனவில் பேயாக மாறி வந்த கண்ணம்மா அடித்து துவைப்பது போன்று காண்பித்து உள்ளார்கள்.

மேலும் கண்ணம்மா, தனது மகள் தன்னிடம் வந்து சேரப் போகிறாள் என்ற சந்தோஷத்தில் சாமி அறையில் விளக்கு ஏற்றி சாமி முன் ‘என் குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து விடாதே’ என்று வேண்டிக் கொண்டிருப்பாள். மறுபக்கம் சௌந்தர்யா கார்டனில் அமர்ந்திருக்கும்போது பாரதி அங்கே வந்த, பாரதியை சௌந்தர்யா வளர்த்த விதம் பற்றியும் ஆனால் தற்போது, சௌந்தர்யா தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் பாரதி பேசிக் கொண்டிருப்பான்.

ஆனால், அப்போது மேலும் ஒரு இடியாக பாரதி ஹேமாவை பிரிந்து என்னால் இருக்க முடியாது, ஹேமாவை பிரிந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறி விடுவான். அதன் பின்னர் வெண்பாவின் கனவில் பெயர் உருமாறி கண்ணம்மா என் குழந்தை வேண்டும்  என்று பயங்கரமாக வெண்பாவை வெளுத்து வாங்கி பயமுறுத்தினாள்.

அதன்பின் பொழுது விடிந்ததும் கண்ணம்மா லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்வது போன்று இந்த எபிசோடை முடித்துள்ளனர். பல திருப்பங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் கண்ணம்மாவிற்கு தொடர்ந்து தெரியவந்துள்ள நிலையில் சீரியல் முடியப் போகிறதோ? என்று குழப்பத்திலும் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியல் விறுவிறுப்பு குறையாமல் தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.