பெரிய ஹீரோக்களே வேண்டாம் என ஒதுங்கும் பாலா.. காரணம் கேட்டா கொஞ்சம் பயமா தான் இருக்கு

பாலுமகேந்திராவிடம் பணியாற்றி சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் படத்தில் நடிகர், நடிகைகளை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார்.

தமிழ் சினிமாவிற்கு விக்ரம் போன்ற நடிகர் தேவை என்பதை சேது படத்தின் மூலம் நிரூபித்தார் பாலா. அதேபோல் சூர்யாவுக்கு நந்தா, விஷாலுக்கு அவன் இவன், அதர்வாக்கு பரதேசி போன்ற படங்களின் மூலம் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார் பாலா.

பாலா இயக்கிய நான் கடவுள் படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். இவருடைய படங்களில் விளிம்பு நிலை மக்களைப் பற்றி அதிகம் பேசுவார். அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவார்.

பாலா பெரிய ஹீரோக்களை வைத்து படங்கள் எடுப்பதில்லை. ஆனால் இவர் படங்களில் நடித்தாலே அந்த நடிகர்கள் முன்னணி ஹீரோக்களாக மாறி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கினால் அது அவர்களின் படமாக மாறிவிடும் என்பதால் பாலா முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க தயங்குகிறார்.

பாலா, நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனர். சில சமயங்களில் நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் பொழுது கொஞ்சம் கோபப்பட்டு கைநீட்ட கூடிய ஆள். பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் ஏராளம்.

ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கினால் இதுபோன்று அவர்களிடம் வேலை வாங்க முடியாது. சில சமயங்களில் கோபப்பட்டு கையை நீட்டினால் அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இதனாலேயே பாலா சினிமாவில் மிகப் பிரபலம் ஆகாத திறமையான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.