பெரிய பெரிய தலைகளுடன் மோதப் போகும் சிம்பு.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த மாநாடு பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றன. என்னதான் தோல்வி படங்களை கொடுத்தாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்காமல் இன்னமும் அவருக்கு ஆதரவாக துணை நின்று வருகின்றனர்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் வகையில் வெற்றி பெற்றது.

தற்போது அவரது ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர். அதற்கு காரணம் அப்படத்தின் டீஸர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆவதால் தற்போது மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் சிம்புவின் கதாபாத்திரமும் அவருடைய கெட்டப்பும் ரசிகருடன் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால் இப்படத்தினை தியேட்டர் உரிமையாளர் வாங்குவதற்கும் முன்வந்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உற்சாகத்தில் உள்ளனர். மேலும்இப்படத்தின் வெற்றியை பொருத்து அடுத்தடுத்து சிம்பு என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.