பெரிய பிரச்சினையை கையிலெடுத்த பாண்டியன் ஸ்டோர்.. இளைய தலைமுறைகளை குறிவைத்த இயக்குனர்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை இல்லாத குறையை தீர்ப்பதற்காக கோயில் கோயிலாக ஏறி இறங்கி முல்லை படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முல்லைக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு இருக்கின்றனர்.

இதற்கு 5 லட்சம் செலவாகும் என்பதால், அந்த தொகை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பெரிதாகும். இருப்பினும் மூர்த்தி பார்ப்போர் இடம் எல்லாம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி முல்லைக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதை மட்டும் முக்கியமாக நினைத்து பணத்தை பெரிதாக்க பார்க்கவில்லை.

இந்த சிகிச்சையை மேற்கொண்ட பிறகு மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக முல்லையை எந்த வேலையும் செய்ய விடாமல் ஒரு குழந்தைபோல் கதிர் பார்த்துக்கொள்வது சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொண்டு இருக்கிறது.

ஏனெனில் முல்லையை பாத்ரூமிற்கு கூட நடந்து செல்லவிடாமல் கதிர் தன் கையிலே தூக்கிக் கொண்டு செல்வது, முல்லைக்கு சாப்பாடு ஊட்டி விடுவது, மருந்து மாத்திரையை எடுத்துக் கொடுத்து சாப்பிட விடுவது, தலை சீவுவது என அனைத்து வேலைகளையும் கதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இதை உன்னிப்பாக கவனிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கதிரை நினைத்துப் பெருமைப்படுகின்றனர். ஆனால் மீனா மட்டும் தனக்கு இப்படி எல்லாம் வாய்க்கவில்லையே என வயிறு பொசுங்குகிறாள்.

எனவே தற்காலத்தில் குழந்தையின்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால் அதையே சீரியலிலும் காண்பித்தல் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருக்கிறது என்பதையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் காட்டியிருப்பது சின்னத்திரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.