பெண்களை கேலிக்கூத்தாக்கும் பிக்பாஸ்.. கமலை ஓரம் தள்ளி விட்டு டிஆர்பி-க்கு போட்ட பிளான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே மக்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி கொள்வது தான்.

அதிலும் இந்த சீசனில் பெண் போட்டியாளர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இல்லத்தரசிகளின் ஆதரவு தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சீசனினில் ஒரு போட்டியாளராக இருப்பவர் அக்ஷரா.

இவர் வீட்டிற்கு வந்த நாள் முதலே மிகவும் அமைதியாக வலம் வருகிறார். புதுமையான சூழலில் இருக்கும் அக்ஷரா அங்கு நடக்கும் சில நிகழ்வுகளால் மனதளவில் சோர்ந்து இருக்கிறார். இதற்கு உதாரணமே அவர் பிக்பாஸிடம் கதறி அழுதது தான்.

ஆனால் அங்கு இருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் அக்ஷராவின் ஒதுங்கிப் போகும் இந்த குணம் திமிர் பிடித்தவள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டது. இதன் காரணமாக நிருப் மற்றும் பிரியங்கா போன்றவர்கள் அவரைத் தொடர்ந்து காயப் படுத்தி வருகின்றனர்.

நேற்றைய கமல் எபிசோடில் கூட பிரியங்கா, அக்ஷராவிற்கு கன்பியூஸ் என்ற பேட்ச்சை கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த நிரூப்,அக்ஷராவிற்கு போலியானவள் என்ற பெயரைக் கொடுத்தார். இதனால் கமல் இருக்கும் பொழுதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த புகைச்சல் இன்றைய ப்ரோமோ விழும் எதிரொலித்தது.

அதற்கு முன்னதாக கமல், அண்ணாச்சிக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது அண்ணாச்சி இசைவானியிடம் “பொம்பள புள்ள சொல்றதை கேளு” என்ற வார்த்தையை கூறினார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த கமல் இளையதலைமுறை எல்லாம் மாறிடுச்சு, நீங்க இன்னும் பழமைவாதியா இருக்காதீங்க என்றார். அதற்கு அர்த்தமே ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான்.

ஆனால் இன்று வெளியான ப்ரோமோ ஏற்கனவே ஆடிக்கொண்டிருந்த நீரூப் காலில் சலங்கை கட்டி விட்டது போல் ஆனது. நாணயம் வைத்திருக்கும் அவர் தனக்கு உதவியாளராக பெண் போட்டியாளரை வைத்துக் கொள்ளலாம் என்ற சலுகை தான் அது.

ஆண் போட்டியாளர்கள் பலரும் இருக்கையில் பெண் என்று அழுத்தமாக பிக்பாஸ் கூறுவது ஏற்புடையதாக இல்லை. அதிலும் இந்த நிகழ்ச்சி பெண்கள் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி. அப்படி இருக்கையில் ஒரு பெண்ணை மட்டம் தட்டும் வகையில் அமைந்த இந்த டாஸ்க் சற்று நெருடலாக உள்ளது.

கமல்ஹாசனுக்கு பெண் மற்றும் குழந்தை ரசிகர்கள் அதிகம், இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அவர்களுக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். நேற்றைய எபிசோடில் ஆண், பெண் சமம் என்று கூறிய கமல்ஹாசன் இன்று இப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதை கவனிப்பாரா என்று வரும் வாரத்தில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒரு நேஷனல் டெலிவிஷனில் அதுவும் மக்கள் விரும்பும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி ஒரு நிகழ்வை மக்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உங்கள் டிஆர்பி காக மக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சரியா?

Poo Sandi Varan

Poo Sandi Varan Cast: Logan, Dhinesh S Krishnan, RamanaDirector: JK Wicky Duration: Drama Poo Sandi Varan projects ...