
பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சார்பட்டா. விளையாட்டு என்பதோடு மட்டுமன்றி அந்த கால அரசியல் சூழல், மக்களின் வாழ்வாதாரம் என படத்தில் பல விஷயங்கள் உள்ளது.
இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் துஷாரா விஜயன். மாரியம்மா என்ற இவரின் கதாபாத்திரம் ரசிகரக்ளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. “வம்புல தும்புல” பாடலில் இவர் போட்ட குத்து ஆட்டம் இளசுகளை இவர் பக்கம் இழுத்தது.
துஷாரா விஜயன் திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அப்பா திமுக பிரமுகர். கோவையில் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பேஷன் டிசைனிங் படிக்க சென்னை NIFT வந்தார். அந்த நேரத்தில் மாடலிங்கில் ஆர்வத்தை திருப்பினார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
சில குறும்படங்களில் இவர் நடித்தும் பிரபலம் ஆனார். போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்துள்ளார் . சார்பட்டா இவரின் சினிமா கேரியரில் நல்ல திருப்பு முனையாக கட்டாயம் அமையும். படுக்கையறையில் ஒரு புறம் சட்டையை இறக்கிவிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.