பூசணிக்காய் உடைக்கும் நேரத்தில் குண்டைத் தூக்கிப் போட்ட வெற்றிமாறன்.. அதிர்ச்சியில் படக்குழு!

பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சூரியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியது.

சில நாட்களுக்கு முன்பு கூட இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று படக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் பூசணிக்காய் உடைத்து விடைபெறும் நிகழ்வுக்கும் படக்குழுவினர் தயாராகி விட்டனர். இந்த நிலையில்தான் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

அது என்னவென்றால் கடைசி நேரத்தில் வெற்றிமாறன் படம் இன்னும் 25 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்று சொல்லிவிட்டாராம். அவர் கூறியதை கேட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அது எப்படி முடியும் என்று அவர்களுக்குள் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு வெற்றிமாறனும் படம் ஏப்ரலில் தான் முடியும் என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்று விட்டாராம். மேலும் பட வேலைகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் தான் வெற்றிமாறன் பட காட்சிகளை பார்த்து அதில் சில காட்சிகளை மறுபடியும் எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார் போல என படக்குழுவினர் யூகித்து வருகின்றனர்.

எது எப்படியோ படம் அனைவருக்கும் பிடித்த மாதிரி இருந்தால் போதும் என்று படக்குழுவினர் அமைதியாக இருந்து விட்டார்களாம். தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கிக் குவித்த இயக்குனர் அவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை முடித்து விடுவாரா என்ன என்று பலரும் பேசி வருகின்றனர்.