தூரத்து இடி முழக்கம்: 1980ஆம் ஆண்டு கே விஜயன் இயக்கத்தில் வெளியான தூரத்து இடி முழக்கம் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகியாக பூர்ணிமா நடித்திருந்தார். இப்படத்தில் பூர்ணிமா செல்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

கூலிக்காரன்: 1987இல் ராஜசேகர் இயக்கத்தில், எஸ் தாணு தயாரிப்பில்,வெளியான கூலிக்காரன் திரைப்படத்தில் ரூபிணி அறிமுகமாகிறார். இப்படத்தில் ரூபினி பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கள்ளழகர்: 1999 இல் வெளியானது கள்ளழகர் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்த், லைலா, நாசர், மணிவண்ணன் என பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜயகாந்த் கண்ணன் கதாபாத்திரத்திலும், லைலா ஆண்டாள் கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கண்ணுபட போகுதய்யா: 1999இல் பாரதி கணேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணுபட போகுதய்யா. இப்படம் குடும்ப திரைப்படமாக எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கரண், சிவகுமார் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சிம்ரன், ராதிகா சௌத்ரி அறிமுகமாயிருப்பார். சிம்ரன் கௌரி ஆக நடித்திருப்பார்.

எங்கள் அண்ணா: எங்கள் அண்ணா திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தார் நடிகை நமீதா. இத்திரைப்படத்தில் பிரபுதேவா,பாண்டியராஜன், சொர்ணமால்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நமிதா கவரி கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.