ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது விஜய் தொலைக்காட்சி தான். அந்த அளவிற்கு ரியாலிட்டி ஷோக்களில் பிரமாண்டமாக நடத்தி வருகிறது.

ஜோடி நம்பர் 1, குக்கு வித் கோமாளி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ,பிபி ஜோடிகள் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அதில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குவது மற்றும் ஒரு சிறப்பாக ரசிகர்களுக்கு அமைந்தது. நான்கு சீசன்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்பட உள்ளது.

covid 19 இரண்டாவது அலைகள் தாமதமாகவே தொடங்கப்படுகிறது என்றாலும் மக்களிடையே ஆர்வம் குறையவில்லை என்றே சொல்லவேண்டும். பிக்பாஸில் ஒலிக்கும் பிக் பாஸ் இன் கம்பீரமான குரலுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர் .

தற்போது சீசன் 5 புதிதாக செட் போடப்பட்டுள்ளது. பல முன்னேற்பாடுகளுடன் செட் அமைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. அதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றிய சில தகவல்கள் இணைய தளங்களில் வந்துள்ளன. அதில் நடிகர் ஜான் விஜய், சீரியல் நடிகை பவானி ரெட்டி, பார்வதி நாயர் மற்றும் திருநங்கையும் இணைகிறார்.

தெலுங்கு பிக்பாஸில் மட்டுமே இதுவரை திருநங்கைகள் பங்கு பெற்ற நிலையில் தற்போது தமிழிலும் முதல்முறையாக திருநங்கையின் பங்கேற்பு உள்ளது. மேலும் பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதியும் முதல் தொடங்கப்படும் என்று தொலைக்காட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது .இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.