புதிய கண்ணம்மா, அஞ்சலியின் பிரசவம்..அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா இந்த வார எபிசோட்

விஜய் டிவியில் புதிய திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்ந்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. வரும் வாரம் பல புதிய அதிரடி காட்சிகளுடன் பாரதிகண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

புதிய கண்ணம்மாவாக வினுஷா அறிமுகமாகும் ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலியின் பிரசவம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த வாரம் பாரதி கண்ணம்மா வில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. அப்பொழுது எதிர்பாராத திருப்பமாக கண்ணம்மா, பாரதிக்கு விவாகரத்து தர மறுக்கிறார்.

எப்படியாவது கண்ணம்மாவை பிரிய வேண்டும் என்று நினைக்கும் பாரதி கண்ணம்மா வின் இந்த அதிரடியால் நிலைகுலைந்து போகிறார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பிரசவத்திற்காக காத்திருக்கும் அஞ்சலிக்கு பிரசவ வலி வந்துவிடுகிறது.

குழந்தை பிறப்பில் அஞ்சலிக்கு பிரச்சினை இருப்பது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. பிரசவ நேரத்தில் கஷ்டப்படும் அஞ்சலியை காப்பாற்ற அகில் போராடுகிறார். பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு அஞ்சலி நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

ஜெயிலில் இருக்கும் வெண்பா, கண்ணம்மா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வெளியில் வரும் வெண்பாவால் கண்ணம்மா எதிர்கொள்ளும் பிரச்சினை போன்ற காட்சிகள் தான் பாரதி கண்ணம்மாவில் வரும் வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

வேத நாயகத்தை தட்டிக்கழித்த இயக்குனர்கள்.. பயன்படுத்திக் கொள்ளாத தமிழ் சினிமா

ஜிந்தா, மாசானம், சக்கரை கவுண்டர், வேதநாயகம் என்ற பெயர்களை கேட்டவுடனே நமக்கு ஞாபகம் வருவது சலீம் கவுஸ் தான். தமிழ் சினிமாவில் வலுவான கதாபாத்திரத்திலும், வசனங்களாலும் வில்லனாக நடித்துள்ளார் சலீம் கவுஸ். இவர் தமிழ் ...