புகழ் போதையால் தலைகால் புரியாமல் ஆடும் சிவகார்த்திகேயன்.. மனோபாலா கேட்ட தரமான கேள்வி

சிவகார்த்திகேயன் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்திருந்தார். இந்தப் படங்கள் வெளியாகிய தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்த சிவகார்த்திகேயன் பண நெருக்கடியால் மிகுந்த அவதிப்பட்டார். அதன் பின்பு அவருக்கு கைகொடுத்தது டாக்டர் படம்.

டாக்டர் படம் வெளியாகி வசூலில் வேட்டையாடியது. இதனால் டாக்டர் படத்தின் மூலம் ஓரளவு சிவகார்த்திகேயன் கடன்களை அடைத்துவிட்டார். இந்நிலையில் தற்போது டான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் இப்படத்திற்காக தற்போது ப்ரோமோஷன் வேலைகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு முன்பு டான் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் எஸ் ஜே சூர்யாவின் போட்டோ மிகப் பெரிதாகவும், அவருக்குப்பின் சிவகார்த்திகேயன் உட்பட மற்ற நடிகர்களின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

இதை பார்த்த சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகன் நான், போஸ்டரில் என்னை பெரிதாக போடாமல் எஸ் ஜே சூர்யா புகைப்படத்தை போட்டு இருக்கிறீர்கள் முதலில் அதை மாற்றங்கள் என கட்டளையிட்டுள்ளார். இதை அறிந்த பல சினிமா பிரபலங்கள் சிவகார்த்திகேயன் வளர்ந்தவுடன் பணிவில் இல்லாமல் தலைக்கனம் பிடித்து ஆடுகிறார் என கூறிவந்தனர்.

தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி கூறும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் நடித்த பிரபலங்களின் பெயரை பதிவிட்டிருந்தார். இதில் சிவாங்கி உட்பட விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அவர்கள் பெயரையும் பதிவிட்டிருந்தார்.

ஆனால் மூத்த கலைஞரான மனோபாலாவின் பெயரை சிவகார்த்திகேயன் பதிவிடவில்லை. இதைப்பார்த்த மனோபாலா என்னுடைய பெயர் எங்கே என கேட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிவகார்த்திகேயன் புகழ் போதையில் இப்படி நடந்து கொள்ளக்கூடாது, மூத்த கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவேண்டும் என விமர்சித்து வருகிறார்கள். மேலும் இப்படியே சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்து வந்தால் மீண்டும் பழையபடி இவரது படங்கள் நஷ்டத்தை சந்திக்கும் எனவும் கூறி வருகிறார்கள்.