பீஸ்ட், வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வலிமை படம் ஒருவழியாக முடிவிற்கு வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை கேட்ட பின்னர் தான் அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளதால் படத்தின் இறுதிகட்ட பணிகளை மிகவும் விரைவாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் வலிமை படத்துடன் ஒரு பிரம்மாண்ட படம் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில், முன்னணி தெலுங்கு நடிகர்களான ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் தான் ஆர்.ஆர்.ஆர் படம். எப்போதோ வெளியாக வேண்டிய இப்படம் கொரொனா தொற்று காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே பொங்கல் பந்தயத்தில் ஏராளமான படங்கள் லிஸ்டில் உள்ள நிலையில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படமும் இப்பட்டியலில் இணைந்துள்ளது. விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷாலின் வீரமே வாகை சூடும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இத்தனை படங்களுடனும் போட்டியிட்டு வலிமை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஓயாத பிரச்சனை.. கடைசியில் அருண் விஜய் படத்திற்கு வந்த நிலைமை

ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் அருண் விஜய் வில்லனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து அவர் காட்டில் மழைதான். தற்போது அருண் விஜய்யின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் தற்போது யானை ...