பீஸ்ட் பட ஷூட்டிங் நிலவரத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.. முகத்துல அப்படி என்ன சோகம்.!

சமீபகாலமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்றாற்போல் நடிகர் விஜய்யும் சமூக கருத்துக்கள் நிறைந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் வெளியான மெர்சல், சர்க்கார், கத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விஜய்க்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே அவரது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டாராம். இதை பூஜாவே அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் பீஸ்ட் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நடத்தினார்கள். மேலும் வரும் வாரத்தில் டெல்லி செல்லும் படக்குழுவினருக்கு அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

நவம்பர் இறுதிக்குள் பீஸ்ட் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் படத்தின் புரமொஷன் பணிகளை அண்ணாத்த படம் வெளியான பின்னர் தொடங்கவுள்ளனர். பீஸ்ட் படம் அடுத்தாண்டு பொங்கலையொட்டி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.