பீஸ்ட் பட தோல்விக்கு காரணம் கேஜிஎப் 2 வா.. வெளிவந்த பகீர் ரிப்போர்ட்

விஜய் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 13 அன்று பீஸ்ட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக படம் வெளியான அன்றிலிருந்தே பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஆரம்பத்தில் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னவர்கள் கூட தற்போது படம் நல்லா இல்லாதது போல் பேசி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பீஸ்ட் திரைப்படம் வெளியான நாள் தான். ஏனென்றால் இதற்கு போட்டியாக மறுநாளே கேஜிஎப் 2 திரைப்படம் வெளியானது.

கன்னட நடிகர் யாஷின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. தற்போது அதைப்போலவே இரண்டாம் பாகமும் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இதனால் படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் பீஸ்ட் திரைப்படம் தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஒருவேளை படம் ஒரு வாரம் கழித்து வெளியாகி இருந்தால் நிச்சயம் ஒரு வெற்றித் திரைப்படமாக இருந்திருக்கும்.

மேலும் கே ஜி எஃப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்த உடனே பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் கூட அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பீஸ்ட திரைப்படமும் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் எப்படியும் லாபம் பார்த்து விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் தைரியமாக களம் இறங்கியது.

இது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தினாலும் சிறு சலசலப்பையும் உண்டாக்கியது. இதுவும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இது போன்ற சில விஷயங்கள் தான் தற்போதைய விமர்சனங்களுக்கும் காரணமாக இருக்கிறது. தயாரிப்பு நிர்வாகம் மட்டும் சிறிது யோசித்து செயல்பட்டிருந்தால் இப்படிப்பட்ட விமர்சனங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்.